Wednesday, April 17, 2013
இறைவா.....வரம் தருவாயா அவர்கட்கு ...????
நான் என்னோட அடுத்த பதிவுக்கான விடயங்கள சேகரிச்சுக்கிட்டு இருக்கும் போது "HIPHOP TAMIZHA " வோட "இறைவா" பாடல் கேட்க நேர்ந்தது. அந்த பாடல பத்தி கண்டிப்பா ஒரு பதிவு போடணும்னு தோணுச்சு . இப்ப நம்ம நாட்டுல நடுக்குற பல குழந்தை இறப்புகளுக்கு காரணமான விசயங்கள HIPHOP TAMIZHA இந்த பாடல பதிஞ்சு இருக்குறாரு..
அதுனால அத பத்தின பதிவ நானும் உங்ககிட்ட பகிருந்துகிரனும்னு நினைக்குறேன். இவரோட "கிளப்ல மப்புல " , " எழுவோம் வா " பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா இந்த "இறைவா" பாடல கேட்ட பிறகு தான் எனக்கும் கொஞ்சம் உறுத்துச்சு. நம்மளால எதையும் மாத்துறது கஷ்டம் தான். ஆனா முயற்சி பண்ணகூடாது நு யாரும் சொல்லலயே...???
வேலைன்னு சொல்லிட்டு பிள்ளைகள கண்டுகாத பெற்றோர்கள், இதனால சின்ன பசங்க எப்படி பாதை மாறி தங்கள் வாழ்க்கையே கேடுத்துகிறாங்க...??? ஏழ்மை நிலைனால தங்கள் படிப்பைத் தொலைகுற பசங்க , இப்படி என்னோட அனுபவத்துலயே நான் பல பேர பாத்துருக்கேன். இத மாத்தணும்னு தோணுது. நாம இதுக்கும் அரசாங்கத்த குறை சொல்லாம நாமளும் நம்மளால முடிஞ்ச வரைக்கும் ஏதாவது செய்யலாம் நு நினைக்குறேன்.
"என்னை என்னப்பா பண்ண சொல்றனு? " நீங்க சொல்றது எனக்கு கேக்குது. நம்மால் முடிஞ்ச வரைக்கும் ஏழை குழந்தைகளோட படிப்புக்கு உதவி பண்ணலாம். அதுக்காக உங்கள சமுதாய சேவை எதுவும் செய்ய சொல்லல. ஏதோ உங்க பக்கத்து வீட்டுலயோ இல்ல பக்கத்து தெருவுலையோ இருக்க குழந்தைகளுக்கு ஒரு சின்ன உதவி பண்ணலாம்ல...????
எனக்கு நம்பிக்கை இருக்குங்க... ஒரு நாள் நான் கண்டிப்பா ஒரு பெரிய ஆளா வருவேன். என்னோட திட்டம், கனவு கொஞ்சம் பெருசு. ஒரு நாள் இந்த நிலைமை எல்லாம் மாறும். என்னோட பங்களிப்பு கண்டிப்பா அந்த மாற்றத்துல இருக்கும்னு நான் நம்புறேன்.
எம் பதில் இந்நாள் வரை தவிக்கும் குழந்தைகட்கு...
"இறைவன் வரம் தருவானா .....???
எனக்கு தெரியவில்லை....
ஆனால் என்னால் முடிந்ததை உனக்கு செய்குவேன்...."
என்னோடு தோள் கொடு தோழா......
மாற்றிடுவோம் இந்த நிலையை...!!!!!!!
இந்த பாடலோட இணைப்ப கிழே பகிருந்திருகேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment