Saturday, June 22, 2013

அர்மேனியாவில் ஹிந்து மன்னர்கள்-1

2 மாத காலமாக   தேர்வுகள் காரணமாக என்னால் பதிவு இட முடியவில்லை. அதற்கு மிகவும் வருந்துகிறேன். முகபுத்தகம் நேரத்தை விரயம் செய்யும் ஒரு கருவி.  அதனால் நான் முகபுத்தகத்தில் இருந்து விலகி விட்டேன். முகபுத்தக போதையில் இருந்து தெளிந்து வருவதற்கு எனக்கு இவ்வளவு காலம் தேவை பட்டது போலும் ?  மறைந்து போன ஒரு சரித்திரமான , "உறர்டு என்று அழைக்க படும் பழைய அர்மேனியாவில் ஹிந்து மன்னர்களின் கதைகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை எல்லாம் Jacob seth அவர்களையே சாரும்.

பலருக்கும் அறிந்த செய்தி  அலெக்சாண்டரின் இந்திய படை எடுப்பு பற்றி , இது நடந்தது 327ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்கு முன். அப்போது அலெக்சாண்டர் படையில் அர்மேனியர்கள் இருந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு  இல்லை. பின்

அலெக்சாண்டர் போருஸ் மன்னரின் வீரத்தைக் கண்டு மெச்சி மீண்டும் படையை கிரக்க பக்கமே திரும்பினார் என்பது பிறிதொரு செய்தி.

நான் இங்கு எழுதி இருக்கும் எவையும் என் சொந்த கருத்துகளோ  எனது புனைப்பு கதையோ அல்ல. இவை zenob என்ற சிரிய வரலாற்று எழுத்தாளரின் biography. Zenob என்பவர், " The Illuminator"  என்று அழைக்க படும்

St.Gregory அவர்களின் மாணவர் ஆவர். St. Gregory அவர்களின் முயற்சியால் தான் உலகின் முதல் கிறிஸ்துவ நாடு உருவானது . அவற்றைப் பற்றிய செய்திகளை பிறிதொரு பதிவில் காண்போம்.  zenob எழுதிய குறிப்புகளை ஆராய்ந்த Dr. Mesrop Jacob seth என்பவரால் 1982 ஆம் ஆண்டு வெளி இட்ட "HINDOOS IN ARMENIA " ஆராய்ச்சி குறிப்பின் சாரம்சமே இது.


உரையை ஆரம்பிக்கும் முன் நான் சிலவற்றை தெளிவு செய்துகொள்ள விரும்புகிறேன். உறர்டு என்பது பழைய அர்மேனியா , தற்போது துர்கி கைவசம் உலா அதனது taron, mus மற்றும் இன்னும் சில பகுதிகளை உள்ளடக்கியது..  இந்த கதை

ஆரம்பிப்பது 149BCயில். அப்பொழுது Valersaces மன்னர் ஆண்டு கொண்டு இருந்தார். இவர் பெருமை மிகுந்த Arsacidae சாம்ராஜிய மன்னராக திகழந்து வந்தார். இவரது ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பொது தான் இரண்டு ஹிந்து இளவரசர்கள்

இவரை அடைக்கலம்  தேடி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் kanauj சாம்ரட்டிய இளவரசர்கள் ஆவர்  இவர்தம் பெயர்களாக zenob கூறுவது " Gissaneh"  மற்றும்  " Demeter" ஆகும். இவர்கள் kanauj சாம்ரட்டிய அரசரான Dinakspaalக்கு

எதிரான அரசியல் சூழ்ச்சிப் போன்ற குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டதாக zenobஇன் உரை சொல்கிறது. இங்கு நாம் இவை நடந்த காலத்தை நோக்கினால், அந்த சமையத்தில் kanauj சாம்ரடியத்தை ஆண்டது Pushyamitra என்பவர் தான்.  Pushyamitra

 மன்னரைத் தான் Dinakspall என்று கூறி இருப்பதாக தெரிகிறது. Krishna என்பதே gissnaesh என்றும்,  ganesh என்பதே Demeter என்றும் மருவி இருப்பதாக Jacob seth நம்புகிறார்.

இரு இளவரசர்களும் kanauj சாம்ரடியத்தில் இருந்து தங்கள் மக்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் மேற்கு நோக்கி பயணம் செய்து உறர்டு வந்தடைந்தனர்.  தன்னை நோக்கி நாடி வந்து இருப்பதால் வளர்சசெஸ் மன்னர் அவர்கட்கு தரான் நில பகுதியை

ஆண்டுக் கொள்ள கொடுத்தார். இரு இளவரசர்களும் தங்கள் மட்களுடன் அங்கு தங்களுக்கென்று ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டு நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். தங்களுக்கு என்று வான் ஏரிக்கரை ஓரம், ஒரு ஹிந்து ஆலயத்தையும் கட்டிக்கொண்டு

வாழ்ந்து கொண்டு இருந்தனர்.  ஆனால்; அவர்தம் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்க வில்லை. அவர்கள் உறர்டு வந்த 15 ஆண்டுகளுக்கு பின் அவர்களை வளர்சசெஸ் மன்னரால் கொல்லப்பட்டார் . அவர்கள் கொல்லப்பட்டதற்கான  சரியான விளக்கம் எதுவும

கூறப்படவில்லை.

ஆனால, அவர்களது ஆட்சி அவர்தம் பரம்பரை உறவினர்கட்கு கொடுக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் kuar, Meghtes  மற்றும்  Horean என்று மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு என்று தனித்தனியாக தத்தம் பெயர்களில்

நகரங்களை உருவாக்கிகொண்டனர். பின் அவர்கள் தம் தந்தைகளான Gissnaehக்கும்  Demeterக்கும் கோவில்களை உருவாக்கினர். அவர்தம் சிலைகள் 12 குபிட் மற்றும்  15 குபிட் அளவிலும் தங்கத்தால் செய்யப்பட்டு கோவில்களில் வைக்கப்பட்டதாகவும்

சொல்லப்பட்டது. பின் இவர்களும் தங்கள் நிலங்களை நன்றாக ஆட்சி செய்தனர்.

ஆனால், இவர்களையும் விதி விட்டு வைக்கவில்லை. இவர்கட்கும் உறர்டு சாம்ரஜியதிற்கும் ஏற்பட்ட போரைப்பற்றி அடுத்த பதிவில் பார்போம்.

Wednesday, April 17, 2013

இறைவா.....வரம் தருவாயா அவர்கட்கு ...????


நான் என்னோட அடுத்த பதிவுக்கான விடயங்கள சேகரிச்சுக்கிட்டு இருக்கும் போது "HIPHOP TAMIZHA " வோட  "இறைவா" பாடல் கேட்க நேர்ந்தது. அந்த பாடல பத்தி கண்டிப்பா ஒரு பதிவு போடணும்னு தோணுச்சு . இப்ப நம்ம நாட்டுல நடுக்குற பல குழந்தை இறப்புகளுக்கு காரணமான விசயங்கள HIPHOP TAMIZHA  இந்த பாடல பதிஞ்சு இருக்குறாரு..


அதுனால அத பத்தின பதிவ நானும் உங்ககிட்ட பகிருந்துகிரனும்னு நினைக்குறேன். இவரோட "கிளப்ல மப்புல " , " எழுவோம் வா " பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது.  ஆனா இந்த "இறைவா" பாடல கேட்ட பிறகு தான் எனக்கும் கொஞ்சம் உறுத்துச்சு. நம்மளால எதையும் மாத்துறது கஷ்டம் தான். ஆனா முயற்சி பண்ணகூடாது நு யாரும் சொல்லலயே...???

வேலைன்னு சொல்லிட்டு பிள்ளைகள கண்டுகாத பெற்றோர்கள்,  இதனால சின்ன பசங்க எப்படி பாதை மாறி தங்கள் வாழ்க்கையே கேடுத்துகிறாங்க...??? ஏழ்மை நிலைனால தங்கள் படிப்பைத் தொலைகுற பசங்க , இப்படி  என்னோட அனுபவத்துலயே நான் பல  பேர பாத்துருக்கேன். இத மாத்தணும்னு தோணுது. நாம இதுக்கும் அரசாங்கத்த குறை சொல்லாம நாமளும் நம்மளால முடிஞ்ச வரைக்கும் ஏதாவது செய்யலாம் நு நினைக்குறேன்.

"என்னை என்னப்பா பண்ண சொல்றனு? " நீங்க சொல்றது எனக்கு கேக்குது. நம்மால் முடிஞ்ச வரைக்கும் ஏழை குழந்தைகளோட படிப்புக்கு உதவி பண்ணலாம். அதுக்காக உங்கள சமுதாய சேவை எதுவும் செய்ய சொல்லல. ஏதோ உங்க பக்கத்து வீட்டுலயோ இல்ல பக்கத்து தெருவுலையோ இருக்க குழந்தைகளுக்கு ஒரு சின்ன உதவி பண்ணலாம்ல...????

எனக்கு நம்பிக்கை இருக்குங்க... ஒரு நாள் நான் கண்டிப்பா ஒரு பெரிய ஆளா வருவேன். என்னோட திட்டம், கனவு கொஞ்சம் பெருசு. ஒரு நாள் இந்த நிலைமை எல்லாம் மாறும். என்னோட பங்களிப்பு கண்டிப்பா அந்த மாற்றத்துல இருக்கும்னு நான் நம்புறேன்.


எம் பதில் இந்நாள் வரை தவிக்கும் குழந்தைகட்கு...
"இறைவன் வரம் தருவானா .....???
எனக்கு தெரியவில்லை....
ஆனால் என்னால் முடிந்ததை உனக்கு செய்குவேன்...."


என்னோடு தோள் கொடு தோழா......
மாற்றிடுவோம் இந்த நிலையை...!!!!!!!


இந்த பாடலோட இணைப்ப கிழே பகிருந்திருகேன்.


Sunday, April 14, 2013

ஆர்மேனியா - நான் கண்ட சொர்க்கம்

ஆர்மேனியா எங்கடா இருக்கு நு நெறையபேர் இப்பவே atlas ல தேட ஆரம்பிச்சு இருப்பீங்க.... என்னபா கடைலயே இல்லையாம் " நு atlas ல பாத்து கேக்குறது புரியுது ... atlas ல தேடி கண்டுபிடிகுறது கஷ்டம்  தான்.....அவ்வளவு சின்ன நாடு . ஆனா வரலாற்று பக்கத்துல சிறப்பான இடம் புடிச்ச நாடு. கிருத்துவ மார்கத்த முதல தழுவிய நாடும் இது தான். இப்ப இருக்க நிலப்பரப்பு ரொம்ப கம்மி தாங்க , ஆனா கிட்டதட்ட 3௦௦௦ வருசங்களுக்கு முன்னாடி இந்த நாடோட நிலப்பரப்பு ரொம்ப பெருசுங்க... பைபிள் ல சொல்லி இருக்க உறர்டு (urartu) தேசம் இது தானுங்க. 


இதோட இன்னொரு பெருமை  என்னன்னா நோவா வோட கப்பல் (noah's ark) தரைத் தட்டுன இடமும் இது தானுங்க. அவரோட மகனால தான் இந்த சாம்ராஜ்யமே உருவாச்சு நு சொல்றாங்க.

"டிக்ரன்" "ஆர்மேன்" போல "தி கிரேட் " நு சொல்ல படுற மன்னர்கள ஈன்று எடுத்த நாடும் இது தான். உலகத்தையே ஆளனும் நு நெனச்ச அலெக்சாண்டரோட படையுல  அர்மேனியரோட பங்கு அதிகம். 


அது சேரி ஆர்மேனியாவ எதுக்குடா நீ சொர்க்கம் நு சொன்ன நு கேக்குறது எனக்கு புரியுது வெயிட் பண்ணுங்கபா மேட்டருக்கு  வரேன். இந்த நாடு கிட்டதட்ட 5௦௦ வருசமா நல்ல தலைமையீன் கீழ் இல்லாம துருக்கியர் கைலயும் , ரஷ்யர் கைலயும் சிக்கி சின்னாபின்னமாகி ( அர்மேனியன் இன படுகொலை .. அத பத்தி தனியா ஒரு பதிவு போடுறேன்.. அது கிட்டதட்ட நம்ம ஈழ தமிழர்கள் இன படுகொலைக்கு சமம் ) இப்ப தான் சுதந்திர காத்த சுவாசிகுது.

எந்த நாட்டுலயும் இந்தியருக்கு கிடைக்காத ஒரு அன்பு  இங்க கிடைக்கும். நம்மள பாத்தாலே  ஒரு குஷியயுடுவங்கான பாத்துகோங்க. அவங்க நமக்கு காட்டுற  அன்பு திக்குமுக்காட வச்சுரும் (அனுபவிச்சதுனால சொல்றேன் ) 


இங்க இருக்க மனுசங்க எல்லாரும் அருமையான மக்கள் .
கடுமையா உழைக்கறவங்க. மனசுல வேற்றும பாக்காம எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசுறவங்க.. மத்த மதத்தினர் கிட்டயும் மத்த இனத்தவர் கிட்டயும் மரியதையா நடந்துகிறவங்க. ஆர்மேனியா வுல இருந்தீங்கனா தெரியும், இங்க இருக்க சீதோசன நிலை எப்பவும் ஊட்டி ல இருக்குறது போலவே இருக்கும் ..

இங்க இருக்க இடங்கள்  ( எரேவன் , garni கோவில் , tsakhadzor, lastiver, dilijan நகரம் ,etc ) எல்லாம் பழமையும் புதுமையும் கலந்து இருக்கும். இந்த நாடோட சீதோசன நிலையும் , மக்களோட அன்பும் , அந்த இடங்களும் உங்களுக்கு சொர்கத்தில இருக்கிற நினைப்ப தரும். அப்படி தரலனா என்னோட ஒரு பக்க மீசைய எடுத்திறேன் {( நான் எப்பவும் trim பண்ணி தான் இருப்பேன்... அது வேற விஷயம்.... நீங்க கோபம் ஆகுறதுக்குள்ள நா அப்பிட்டு ஆகிகுறேன் )}


அடுத்த பதிவுல இந்தியா வுக்கும் அர்மேனியாவுக்கும் உள்ள தொடர்ப பத்தியும், அர்மேனியா வந்த ஹிந்து மன்னர்களும் , அவங்களுக்குள நடந்த சண்டைய பத்தியும் பதிவு பண்ணுறேன்.
இப்ப அப்பிட்டு அகிக்குறேன் ....

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா......????



இந்த பதிவு நான் ராம் குமார் ங்கிறவர் எழுதுனது, பிடிச்சிருந்தது ங்கிறது நாள ஷேர் பண்றேன்.......




"எங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து குதித்து விடுகிறார்கள். ’தை முதல் நாள் தான் தமிழர்களோட புது வருசம்.. சித்திரை ஒன்னு இந்துக்களோட புது வருசம்’ என்று எதையாவது வந்து கத்திக்கொண்டு இருப்பார்கள்.. சித்திரை ரெண்டாம் தேதிக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாது.. மீண்டும் அடுத்த ஆண்டு பங்குனி கடைசியில் வருவார்கள். ’தை தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று தொண்டை கிழிய கத்துவார்கள். மீண்டும் போய் விடுவார்கள். அவர்களுக்கும், லேசான குழப்பத்தில் இருக்கும் சில தமிழர்களுக்கும் எனக்கு தெரிந்த விபரங்களை வைத்து விளக்க முயல்கிறேன்.

தமிழன் தை முதல் நாளை தன் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும், மாடுகளுக்கும் பொங்கல் வைத்து கொண்டாடுகிறான். அது நன்றி சொல்லும் ஒரு பண்டிகை. நன்றியை நீங்கள் ஒருவருக்கு ஆரம்பத்திலா சொல்வீர்கள்? அதே போல் தை மாதம் பெரும்பாலும் அறுவடை நடைபெறும் மாதம். அறுவடையை யாராவது ஆரம்பமாக சொல்வார்களா என தெரியவில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி இருக்கிறதாம். ஆம், அறுவடை முடிந்ததும் கையில் காசு புலங்கும் அதனால் வழி பிறக்கும். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன சார் சம்பந்தம்? சித்திரையில் தான் மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பான் தமிழன். தன் தொழிலை வாழ்வை புதிதாக ஆரம்பிக்கும் காலத்தை புத்தாண்டாக கொண்டாடினான். அறுவடை செய்து எல்லாவற்றையும் வழித்து அள்ளுவதை புத்தாண்டாக கொண்டாட அவன் மடையன் இல்லை.

உலகின் பெரும்பாலான கலாச்சார, வரலாற்று சிறப்புகள் இருக்கும் நாடுகளில் இளவேனில் காலத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இளவேனில் என்பது நமது சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் தான். தை மாதம் என்பது முன்பனிக் காலம். இதை பற்றி விபரம் தெரியாத பலரும், அரைகுறையாக எங்கோ கேட்டதை வைத்துக்கொண்டு தை மாதத்தில் தான் இளவேனில் காலம் வருகிறது என்கிறார்கள். பத்தாங்கிளாஸ் தமிழ் தான் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலும், ஒரு விசயத்தை சொல்லும் முன் நெட்டிலாவது தேடி சரி பார்த்த பின் சொல்லலாமே மக்களே?  இளவேனில் காலம் சித்திரை வைகாசியில் வருவது. தமிழர்கள் வரலாறு மற்றும் கலாச்சார சிறப்பு உடையவர்கள் என்பது உண்மையானால் அவர்கள் சித்திரையில் தான் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதும், சித்திரை தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதும் உண்மை. உலக இலக்கியங்களில் பனிக்காலத்தை ஒரு முடிவாக/அழிவாக தான் உவமைப்படுத்துவார்கள்.. தை என்பது முன்பனிக்காலம். அப்படிப்பட்ட பனிக்காலத்திலா தமிழ்ப்புத்தாண்டை நாம் கொண்டாடியிருப்போம்?

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. ’சித்திரை மாதம் இந்துக்களின் புத்தாண்டு, தமிழர்களுக்கு இல்லை’.. ‘தமிழ் ஆண்டுகளுக்கு பெயர் சமஸ்கிருதத்தில் இருக்கிறது’ என்று குட்டையை குழப்ப ஆரம்பிப்பார்கள். என் பெயர் ஒரு சம்ஸ்கிருத பெயர் தான்.. (திராவிடம் என்பதே கூட சமஸ்கிருத பெயர் தான் என்கிறார்கள் சில அறிஞர்கள்).. நான் ஒரு இந்து தான்.. இவர்களின் கூற்றுப்படி நான் தமிழன் இல்லையா? இவர்கள் என்னை தமிழன் இல்லை என்று கூட சொல்வார்கள். ஏன்னா ஒரு இந்துவை இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதையே வேறு விதமாக கேட்போம்.. ஜனவரி ஒன்றை கிறிஸ்தவ புத்தாண்டாக இவர்கள் கூறுவார்களா? தமிழன் ஜனவரி ஒன்றையும் கொண்டாட கூடாது என்று டிசம்பர் கடைசியில் வந்து தொண்டை கிழிய கத்துவார்களா? ஹிந்துக்களை தமிழர்கள் இல்லை என்பது போல் கூறும் இவர்கள் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் இல்லை என்பார்களா? ஊருக்கு இளிச்சவாயன் இந்து.. அதனால் எல்லோரும் அவனை மட்டம் தட்டி அவனின் பண்டிகைகளை நக்கலாகத்தான் பேசுவார்கள். அதிலும் சித்திரை ஒன்று என்னும் தமிழர் புத்தாண்டை கூட இந்துக்களுக்கு மட்டுமானது என்பது போல் விசமத்தனமாக பேசுவது இவர்கள் மக்களின் மனதில் என்ன விதமான எண்ணத்தை விதைக்க நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

இவர்கள் சொல்ல வருவது ஆரியர்களின் சூழ்ச்சியால் நாம் சித்திரையை புத்தாண்டாக கொண்டாடுகிறோம் என்பது. ஆரியர்கள் என்ன சூழ்ச்சி செய்தார்கள் இதில் என்று எனக்கு புரியவில்லை. நாம் கும்பிடும் மாரியம்மன், காளியம்மன் போன்ற சிறு தெய்வங்களை ஆரியர்கள் வணங்க மாட்டார்கள். நம் முருகன் கூட அவர்களுக்கு சுப்ரமணியன் தான். மாரியம்மனும் காளியம்மனும் தமிழர்களின் தெய்வங்கள். இந்த கோயில்களில் ஆரியர்கள் சம்பளத்திற்கு பூஜை செய்தாலும் நம்மை போல் வணங்க மாட்டார்கள். நாம் வணங்கும் மாரியம்மன் காளியம்மன் மற்றும் சிறு தெய்வ கோயில்களில் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடக்கின்றன? பங்குனி முதல் சித்திரை வரை தமிழனின் திருவிழா. பங்குனியிலும் சித்திரையிலும் ஏன் தமிழன் கோயில் திருவிழாக்களை வைத்தான்? சும்மா பொழுது போகாமலா? தன் விவசாய தொழில் ஆரம்பிக்கும் இந்த காலத்தில், தான் கோயிலுக்கு போய் கடவுளிடம் ஆசி பெற்று தொழிலை ஆரம்பிக்கிறான். சம்பந்தமே இல்லாத தையில் எந்த கோயிலில் திருவிழா நடக்கிறது? எல்லாவற்றையுமே கடவுளோடு இணைக்கும் தமிழன் தன் புது வருடத்தை கடவுளோடு இணைக்காமல் இருந்திருப்பானா? தமிழும் மலயாளமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒரே மொழியாக இருந்தன. அத்தகைய மலயாள மக்கள் சித்திரையில் தான் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அவர்களும் பார்ப்பன அடிமைகளா?

சரி, இதெல்லாம் வரலாறு மற்றும் ஒவ்வொருவரின் எண்ணங்களை வைத்து அமைவது. இப்போது அரசியலுக்கு வருவோம்.. 1921ல் சில அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து தை தான் தமிழ் புத்தாண்டு என முடிவு செய்தார்களாம். அதை ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர், 4 முறையும் ஞாபகமே இல்லாமல் தான் ஐந்தாவது முறை பதவிக்கு வரும் போது மட்டும், மண்டையில் திடீரென பல்ப் எரிந்து “இனி தை 1 தான் தமிழ் புத்தாண்டு’ என்று அறிவித்தாராம்.. ஆனால் அவர் ஆட்சியிலேயே தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னரும் கூட சித்திரை ஒன்றுக்கு லீவு விடுவாராம். இது தான் அவரின் இரட்டை வேசம். ஏன் லீவு என்று கேட்டால் “சித்திரை திங்கள் விடுமுறை” என்பார். அப்போ வைகாசி திங்கள், ஆனி திங்கள் மார்கழி திங்களுக்கெல்லாம் லீவு விடுவாரா என்று யாரும் அவரிடம் கேள்வி கேட்க கூடாது. ஏன்னா, அவர் தான் ’தி ஒன் அண்ட் ஒன்லி தமிழன தலிவர்’.. கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் சொன்னதுக்கு எதிரா கேள்வி கேட்டா நீங்க தமிழின துரோகி ஆகிருவிங்க.. பார்ப்பன அடிவருடினு ஒரு எக்ஸ்ட்ரா பட்டமும் சேர்ந்து கிடைக்கும்.

சரித்திரம் என்பதே யாரோ ஒருவர் தன் கற்பனையை சேர்த்து சொன்ன ஒன்றை, எல்லோரும் உண்மை என நம்பிக்கொண்டிருப்பது தான். அத்தகைய சரித்திர ஆராய்ச்சி என்பது புதிதான, வழக்கத்தில் இல்லாத ஒன்றை பற்றி இருக்கலாம். ஏற்கனவே காலம் காலமாக சித்திரையில் கொண்டாடி வருவதை பற்றி ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்? சரி அந்த ஆராய்ச்சியில் தமிழன் தை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடினான் என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. வெறும் ஊகங்கள் தான். இவர்கள் வெறும் ஊகத்தை வைத்துக்கொண்டு தையில் புத்தாண்டை கொண்டாட சொல்வார்களாம். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருவதை நிறுத்திவிட்டு இவர்கள் பின் வாலை ஆட்டிக்கொண்டு செல்ல வேண்டுமாம். தமிழனை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

சுருக்கமாக, தமிழன் தன் கடவுள்களுக்கு இளவேனில் காலத்தில் பண்டிகை வைத்து தன் தொழிலை ஆரம்பித்து கொண்டாடிய மாதமான சித்திரையில் தான் அவனின் புத்தாண்டு தொடங்குகிறது. தை என்னும் அறுவடை மாதத்தில் அவன் தனக்கும் தன் தொழிலுக்கும் உதவி செய்த சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்கிறான். அதுவும் ஒரு சிறப்பான முக்கியமான பண்டிகை தான் என்றாலும் அது நம் புத்தாண்டோடு சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. தமிழர்களாகிய நம் புத்தாண்டு சித்திரை ஒன்றே...

மிக சீரியசான பின்குறிப்பு:
ஜனவரி ஒன்றோ, தை ஒன்றோ, சித்திரை ஒன்றோ - புத்தாண்டு என்று கொண்டாடப்படும் நாள் வெறும் இன்னொரு நாள் தான். அதே சூரியன், அதே வெயில், அதே வேலை, அதே குடும்பம், அதே மின்வெட்டு, அதே உலகம், அதே டிராஃபிக், அதே ஆஃபிஸ், அதே டென்சன் என எல்லாமே மாற்றம் இல்லாமல் முந்தைய நாள் நடந்தது தான். அடுத்த நாளும் நடக்கப்போவது தான். புத்தாண்டில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. பின் புத்தாண்டை மட்டும் மாற்றி என்ன ஆகிவிடப்போகிறது? நாட்டில் நாம் சண்டை போட எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன.. ஒரு அரசியல்வாதி சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக, நம் பழக்க வழக்கங்களை அறியாமல் அவர் சொல்வதை கேட்டு அப்படியே பின் செல்வது எந்த வகையில் சிறந்தது என தெரியவில்லை. "

ராம் குமார் அருமையான பதிவு....ஆனா ஹிந்து துவத்த பத்தி கொஞ்ச எக்ஸ்ட்ரா பேசுற மாதிரி தோனுச்சு......பட் அது ஒன்னு பெரிய விஷயம் இல்ல.....

என்ன நாள இருந்த என்னங்க....???? 
கொண்டாட ஒரு நாள் கெடச்சா கொண்டாட வேண்டியது தானே...???
என்ன நா சொல்றது செரிதானே ? 

முதல் பதிவு........

இன்று என் முதல் பதிவை இந்த ப்ளாக் இல் பதிவு செய்யுறேன் தோழர்களே.......

எனக்கு தெரில இந்த ப்ளோக எத்தன பேரு பாபங்க நு ....
இதுக்கு முன்னாடி 2 ப்ளாக் எழுதலாம் நு நெனச்சு இருந்தேன்....
ஆனா என்னால என்ன எழுதுருனு தெரில.....

முதல என்ன பத்தி சொலிடுருரேன்.....
நான் ஒரு சாதாரண குடும்பத்தில இருந்து வந்தவன் தாங்க...
மருத்துவம் படிக்கணும் நு ஆசை இருந்துச்சு....

என்னால 2 வருசமா பனிரெண்டாம் வருஷம் படிச்சு 2௦௦/2௦௦ கட் ஆப் வாங்குற
பயபுளைக்க கூடலாம் போட்டி போடா முடிலங்க...
வேற வழி இல்ல.....ரஷ்ய இல்ல சோவித் நாடுகள்ல தான் படிக்கணும் நு தோனுச்சு.....
அப்ப தான் அர்மேனியா பத்தி கேள்வி பட்டேன்....

அப்பறம் இப்ப இங்க இருகேங்க....
2 வருஷம் ஆச்சு இங்க வந்து.........
இன்னும் நாலு வருஷம் இருக்கு......

எனக்கு இந்த ப்ளாக் எழுதணும் நு தோணுனது......பிரகாஷ் மாம்ஸ் நாள தான்.....

அந்த மங்கள கரமான விசயத்த இந்த சித்திரை முத நாள் ல இருந்து ஆரம்பிட்கலம் நு தோனுச்சுங்க ......
என்னோட பதிவுல எதாவுது தப்பு இருந்துச்சுனா சொல்லுங்க ...
திருத்திகிரேன்........

இப்படிக்கு.....
அன்பு தோழன்.....
ஆர்மேனிய தமிழன்.